Monday, October 25, 2010

நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் ( பகுதி 3 )

முன்குறிப்பு : நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் இந்தப் பதிவோட முதல் இரண்டு பகுதிகள படிக்கணும்னா லேபிள்ல பொய் நாட்டாமை அப்படிங்கிறத கிளிக் பண்ணி படிங்க.!

நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் ஒரு சுடுகாட்டுல நின்னுட்டிருக்காங்க. அங்க இரண்டுபேர் ஒரு குழில இருந்து பொணத்த தோண்டி எடுத்திட்டு இருக்காங்க. இன்னிக்கு பசுபதி லீவ். அதனால பசுபதிக்குப்பதிலா நம்ம இம்சைஅரசன் பாபு  அண்ணன் போறாரு. இனி அங்க நடந்தப் பார்கலாம்.!

நாட்டாமை பட நாட்டாமை : தோன்றா தோன்றா., நல்லா தோண்டு ., நாந்தே தீர்ப்பு சொல்லுவேன்.!

தமிழ்ப்பட நாட்டாமை : தென்றா பேசுற ., நான்தான் சொல்லுவேன்.!

நா.நாட்டாமை : டேய் , நீ தானடா இவன கள்ளிப்பால ஊத்தி கொல்ல சொல்லி தீர்ப்பு சொன்ன., இந்த தடவ நான்தாண்டா சொல்லுவேன்.!

இம்சை பாபு  : இப்ப எதுக்கு இங்க வந்து இதைய தோண்டிட்டு இருக்கீங்க..?

நா.நாட்டாமை : இவன் ஒரு தப்புப் பண்ணிடாண்டா., அதான் தீர்ப்பு சொல்லலாம்னு வந்தோம்.!

இம்சை பாபு : அப்படி என்ன தப்பு பண்ணுனான்..?

த.நாட்டாமை : தயிர் ஏன் வெள்ளையா இருக்கு அப்படின்னு கேட்டதுக்கு பல் வெள்ளையா இருக்கு அதனால தயிரும் வெள்ளையா இருக்கு அப்படின்னு தப்பா சொன்னதால இவன கள்ளிப்பால் ஊத்தி கொல்ல சொல்லிட்டேன்.!

இம்சை பாபு : சரியாத்தான மக்கா சொல்லிருக்கான்..!

த.நாட்டாமை : தென்றா பேசுற , அப்படின்னா பால்ல இருந்து வர்ற நெய் மட்டும் எப்பர்ரா மஞ்சளா இருக்கு...?

நா.நாட்டாமை : அப்டி கேள்றா..?

இம்சை பாபு : சரி இப்ப இவன எடுத்து என்ன பண்ண போறீங்க..?

நா.நாட்டாமை : எங்களுக்கு வேலை இல்லைடா, அதான் பழைய தீர்ப்பஎல்லாம் மறுபடி பஞ்சாயத்து வச்சு தீர்ப்பு சொல்லப்போறோம்.!

இம்சை பாபு : ஆனா இவன்தான் செத்துட்டானே .?

த.நாட்டாமை : செதவனா இருந்தாலும் உசுரோட இருகரவனா இருந்தாலும் நியாயம் நியாம்தண்டா..!

( அந்த குழிக்குள்ள இருந்து ஒரு எலும்புக்கூட்ட எடுக்குறாங்க., அத பார்த்த உடனே )

த.நாட்டாமை : என்னடா இவன் இன்னும் அப்படியேதான் இருக்கான். வளரவே இல்லையா .?

இம்சை பாபு : செத்ததுக்கு அப்புறமா எப்படிங்க வளருவான்..?

த.நாட்டாமை : அவனுக்கு நான் தினமும் சோறு அனுப்பிட்டு இருந்தன்லடா..? பசுபதி கூட சோறு நல்லா தின்கிரான்னு எங்கிட்ட சொல்லி அடிக்கடி காசு வான்குவான்ல. இப்ப என்னடா வளராம அப்படியே இருக்கறான். இந்த நாத்தம் அடிக்கிது ., தண்ணி கூட வாக்கலையா ..?

நா.நாட்டாமை : நான்தான் தீர்ப்பு சொல்லுவேன்.!

இம்சை பாபு : இந்த நேரத்துலயும் நான்தான் தீர்ப்பு சொல்லுவேன்னு சொல்லுறானே , என்ன கொடுமைடா சாமி ..?

த.நாட்டாமை : தீர்ப்பு அப்புறம் சொல்லிக்கலாம் , முதல்ல பசுபதி கிட்ட கேளுடா .? இவன் ஏன் வளரலைன்னு..?

நா.நாட்டாமை : தென்றா பாபு , போன போடுறா பசுபதிக்கு..!

(பாபு பசுபதிக்கு போன் போட்டு த.நாட்டாமையிடம் தருகிறார்.)

த.நாட்டாமை : தென்றா பசுபதி , அன்னிக்கு ஒருத்தனுக்கு கள்ளிப்பால ஊத்திக்  கொன்னதுக்கு அப்புறம் அவனுக்கு சோறு குடுத்துட்டு இருந்தீள , அவன் வளரவே இல்லையேடா..?

பசுபதி : யாருக்கு கள்ளிப்பால் ஊத்துனீங்க..? உங்களுக்கு யார் வேணும் .? எனக்கு ஒண்ணும் புரியலையே..?

நா.நாட்டாமை : தென்றா பசுபதி , நீ நம்பட பையந்தான. என்ன கூடவா மறந்திட்ட..?

பசுபதி : ஐயோ , நானே ஒச்சாயி படம் ஓடிட்டு இருக்குற தியேட்டர்ல இருக்கேன் ., அப்புறமா கூப்பிடுங்க..! ( போனை கட் செய்து விட்டார் )

நா.நாட்டாமை : தென்றா பாபு , நீ ஆருக்குடா போன் போட்ட ..?

இம்சை பாபு : நடிகர் பசுபதிக்கு தான் போட்டேன்..

நா.நாட்டாமை : அவருக்கு எதுக்குடா போட்ட , நம்பட பையன் பசுபதிக்கு போட வேண்டியதுதானே..!

இம்சை பாபு : அது எவன்டா உம்பட பையன் பசுபதி ..?

நா.நாட்டமை : நீ நாட்டாமை படம் பார்த்தியா இல்லையா .?

இம்சை பாபு :உன்னைய பாக்குறதே பெருசு , அத வேற பாக்கணுமா..?

த.நாட்டாமை : என்னது நாட்டாமை படம் பாக்கலையா ., தென்றா பேசுற ..? இவன புடிச்சு கள்ளிப்பால ஊத்திக் கொல்லுங்கடா ..?

நா.நாட்டாமை : செல்லாது செல்லாது ., நான்தான் தீர்ப்பு சொல்லுவேன்.! இவன ஊர விட்டு தள்ளி வெக்கறேண்டா .! ஆரும் இவன்கூட பேசப்படாது.!

இம்சை பாபு : ( லூசா இருப்பானோ , இந்த ஊர்லையே ஒருத்தரும் இல்லைன்னு தான் பொணத்த எடுத்து தீர்ப்பு சொல்லிடு திரியுதுக , என்ன கொடுமையோ , நான் தப்பிச்சேன்.!!)

பின்குறிப்பு : காமெடி பண்ணனுனு ஆரம்பிச்சு மொக்கைல வந்து முடிஞ்சிடுச்சு ..!!

சிறிய எச்சரிக்கை : அடுத்த பதிவு சருகு.!(தேவா ஸ்டைல்)

நீதி : பாவம் நீங்க ..!

Thursday, October 21, 2010

பானைய வச்சு சம்பாரிக்கணுமா.?

முன்குறிப்பு : மொக்கை எங்கள் தெய்வம்.!

இதுல என்னங்க தப்பு இருக்கு:
ஒரு வாரம் முன்னாடி எங்க பக்கத்து வீட்டுக்காரர் எங்கிட்ட சொன்னார் . " என்னோட பைக் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது., அது என்ன ஆச்சுனு தெரியல..? நான் செக் பண்ணினதுல எல்லாமே சரியாத்தான் இருக்கு ., எனக்கு பெட்ரோல்ல தான் சந்தேகமா இருக்கு. அதனால அதுல இருந்த பெட்ரோல தனியா இந்த பாட்டில்ல எடுத்துட்டு வந்திருக்கேன் ., உன்னோட பைக் ல ஊத்தி டெஸ்ட் பண்ணி பார்க்கணும் " அப்படின்னார்.
சரி அதனால என்ன ஆகிடப்போகுது அப்படின்னு நினைச்சிட்டு " சரி குடுங்க., டெஸ்ட் பண்ணலாம்னு " வாங்கி என்னோட வண்டில ஊத்தி ஸ்டார்ட் பண்ணினேன்.. ஸ்டார்ட் ஆகிடுச்சு. அத பார்த்த அவருக்கு சந்தோசம். " எதுக்கும் ஒரு ரவுண்டு போயிட்டு வந்திடு.! " அப்படின்னார். சரி கொஞ்சம் நல்லா டெஸ்ட் பண்ணலாம் அப்படின்னு ஒரு ரவுண்டு போயிட்டு வந்தேன். நல்லாத்தான் போச்சு.. ஆனா இதுக்கு அப்புறம் இருக்குற பெட்ரோல்ல பிரபலம் இருந்தா என்ன பண்ணுறது..? சரி எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணிடலாம் அப்படின்னு அந்த 2 லிட்டர் பெட்ரோல் தீர வரைக்கும் ஒரு 3 மணிநேரம் டெஸ்ட் பண்ணினேன்.அப்புறம் வீட்டுக்கு வந்ததும் பெட்ரோல்ல பிரச்சினை இல்லைங்க.. நான் புல்லா டெஸ்ட் பண்ணிட்டேன் அப்படின்னு சொன்னேன்.அத சொனதுமே அவருக்கு செம கோவம் வந்துடுச்சுங்க. இருந்ததே 2 லிட்டர் தான். அத்தனையும் முடிச்சிட்டியே.? அப்படின்னு கண்டபடி திட்டினார். நீங்களே சொல்லுங்க நான் என்ன தப்பு செஞ்சுட்டேன் அப்படின்னு இவ்ளோ கோவப்படுராறு..? நல்லதுக்கே காலம் இல்லைங்க..!!

பானைய வச்சு சம்பாரிக்க :
*.ஒரு குடத்த எடுத்துக்குங்க .. அதுல பாதி வரை தண்ணி ஊத்திக்குங்க ..
அப்புறம் அந்தக் குடத்த எடுத்துட்டு போய் ஒரு Bus stand நடுவுல வச்சிருங்க ... இப்ப பாருங்க , நிறைய பேர் காசு போடுவாங்க ..
ஏன்னா " குறை குடம் கூத்தாடும்ல  "..
நான் பச்சை தண்ணி ஊத்திருக்கேன் .. நீங்க என்ன தண்ணி வேணாலும் ஊத்தி வையுங்க ...

எங்கள் சங்கத்திற்கான(VAS) கவிதை ஒன்று :
வானத்து சூரியனுக்கும் உண்டு ஓய்வு 
எங்கள் வலையுலக சூரியனுக்கு இல்லை ஓய்வு ;
சூரியக் கதிர்வீச்சில் பனித்துளிகள் மறைந்துவிடும் 
எங்கள் சூரியக்கதிரில் பணிச்சுமைகள் குறுகிவிடும் ;
சூரியனால் ஒளிர்கிறது நிலவு 
எங்கள் சூரியனால் மிளிர்கிறது ப்ளாகர்;
சூரியன் தெரிவது 12 மணி நேரம் 
எங்கள் சூரியன் தெரிவது 24*7.!
(போல்ஸ்கார் & அருண் அண்ணா இதுக்கு என்ன சொல்லப் போறீங்க..?) 

மொக்கயரசன் வரலாற்றிலிருந்து மொக்கை பற்றிய சில வரிகள் :
மொக்கை இது மூன்றெழுத்து மந்திரம். ஒரு சொல் வாக்கியம். ஒற்றைச்சொல் கவிதை.மொக்கையே எங்களின் வாழ்க்கை. மொக்கயில்லையேல் உலகம் இல்லை. எங்கள் கனவுகளில் மொக்கை ., நினைவுகளில் மொக்கை , வார்த்தையில் மொக்கை.. மொத்தத்தில் நானே மொக்கை ., மொக்கையே நான் .! எங்களை வாழ வைப்பது மொக்கை ., நாங்கள் வாழ்வதும் மொக்கைக்காகவே.! ஆதலின் மானுடரே மொக்கையைப் படிப்பீர். மொக்கையாய் வாழ்வீர்.!!

தீபாவளி வருது. அதுக்காக என்னோட பழைய மொக்கை ஒண்ணு :
சத்தம் இல்லாம பட்டாசு வெடிக்கணுமா..?
பட்டாசு வெடிக்கும்போது பட்டாச அதோட வாய்மேல கைய வச்சிட்டு வெடிக்க சொல்லுங்க.! சத்தம் வராது.!

ஒரு சின்ன சந்தேகம் :
மாம்பழத்துக்குள்ள மாங்கொட்டை இருக்கு;
பேரிச்சம் பழத்துக்குள்ள பேரிச்சன்கொட்டை இருக்கு ;
அப்படின்னா வாழைப்பழத்துக்குள்ள வாழைக்கொட்டை ஏன் இல்லை..?


ஒரு சின்ன கண்டுபிடிப்பு : 
காதல் எதுல ஆரம்பிச்சு எதுல முடியுதுன்னு தெரியுமா ..?
"கா"வுல ஆரம்பிச்சு "ல்"ல முடியுது.!


நீதி :இந்தப் பதிவப் படிச்சு உங்க நேரத்த வீணாக்குனதுக்கு நன்றி.!


பின்குறிப்பு : என்னாலையும் சின்னப்பதிவு எழுத முடியும் .!!


Tuesday, October 19, 2010

கி.பி.2060-௦௦ல் உலகம்

முன்குறிப்பு : 2060 ல உலகம் எப்படி இருக்கும் அப்படின்னு என்னோட கற்பனைங்க.! இது என்னோட கற்பனை மட்டும் இல்லை ., விருப்பமும் கூட.!

*.சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறத்தலாக இருக்கும் கண்ணாடிப்பைகளுக்கு மாற்றுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு மக்காத இந்தக் கண்ணாடிப்பைகள் ( POLY PACKS ) அறவே ஒழிக்கப்பட்டன.!

*.இரண்டாம் வகுப்புப் பாடத்தில் பிச்சைக்காரர்கள் அப்படின்னு ஒரு பாடம் வச்சு அதுல " பிச்சைக்காரர்கள் அப்படின்னு சிலர் இருந்தாங்க." என்று படத்தைக் காட்டி வரலாற்றுப்பாடம் நடத்திட்டு இருக்காங்க.!

*.அரசியல் என்பது ஒரு தொழிலாக இல்லாமல் சேவையாக செய்யப்பட்டது. மக்களின் அடிப்படித் தேவைகள் அனைத்தும் நிறைவேறியிருந்ததால் சேவை என்பது கூட தேவை இல்லாமல் போனது. ஆதலால் நாடுகளுக்கான பிரதமர்களும் , முதலமைச்சர்களும் வேலைவாய்ப்பு அலுவகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.!

*.மக்களின் நாகரீகப் பழக்கங்களால் சாலைகளில் எச்சில் துப்புவது , சிறுநீர் கழிப்பது போன்ற தவறுகள் அறவே இல்லாமல் சாலைகள் அழகாகவும் , சுத்தமானதாகவும் காட்சி அளிக்கிறது.!

*.சுத்தமான சூழல் , மக்களின் தூய்மையான பழக்க வழக்கங்களால் நோய்களே இல்லாத சமுதாயம் உருவானது. இதனால் காலப்போக்கில் மருத்துவமனைகளும் , மருந்துக்கடைகளும் ஒவ்வொன்றாக மூடப்பட்டன.


*.மதுவினால் ஏற்படும் தீங்கினை மக்கள் புரிந்து கொண்டதால் நாடெங்கிலும் இருந்த மதுக்கடைகள் முழுவதுமாக மூடப்பட்டன.!


*.புகையிலை , பீடி , சிகரெட் போன்ற போதைப்பொருட்களை  மக்கள் முழுவதுமாக கைவிட்டிருந்தனர்.!


*.உலகத்தீவிரவாத இயக்கங்கள் அமைதி வழிக்குத் திரும்பியதால் பாகிஸ்தான் , பாலஸ்தீனம் , ஈரான் , ஈராக் போன்ற நாடுகளில் மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றனர்.!


*.தீவிரவாத அச்சுறத்தல்கள் இல்லாததால் உலகநாடுகளில் ராணுவம் மற்றும் காவல்துறைகளுக்கு செலவிடும் பெரும்பாலான தொகை நாட்டின் கட்டுமானப் பணிகளுக்கு செலவிடப்பட்டதால் சாலை வசதிகளும் இதர அத்தியாவசிய தேவைகளும் எளிதாக நிறைவேற்றப்பட்டன.!


*.சுவர்களில் சுவரொட்டிகள் என்பது எங்கேயும் கிடையாது. மேலும் இங்கே நோட்டீஸ் ஒட்டாதீர் , மீறினால் தண்டிக்கப்படுவீர் என்கின்ற வாசங்களும் எந்த சுவற்றிலும் எழுதப்படவில்லை.!

*.இலங்கையில் பேரமைதி நிலவி வருகிறது. தமிழன் ,சிங்களவன் என்கின்ற மொழிப்பிரசினைகள் அறவே நீங்க அனைவரும் மனித குலத்தவர் என்கின்ற ஒற்றுமை வளர்ந்ததால் அனைவரும் மகிழ்வுடன் வாழ்கின்றனர்.!

*.பெரும்பாலும் விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குப் பதிலாக அதிக தீங்கு விளைவிக்காத எதிர்ப்புப் பொருட்களை பயன்படுத்துவதால் புதிய புதிய நோய்கள் எதுவும் பரவுவதில்லை.!

*.மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவது , தொலைபேசியில் பேசியபடியே ஓட்டுவது மற்றும் கவனக்குறைவுடன் வாகனகளை இயக்குவது  போன்ற தவறுகளை விடுத்து மக்கள் அனைவரும் சாலை விதிகளை மதிப்பதால் சாலை விபத்துகள் பெரும்பாலும் குறைந்து விட்டன.!

*.உலக நாடுகளில் இருந்த அனைத்து அணு ஆயுதங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டதால் உலக அமைதி நிலைநிறுத்தப்பட்டது.!


*.ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள ஏழை நாடுகளில் விவசாயத்திற்கு பெரும் ஊறு விளைவித்த வெட்டுக்கிளிகள் முழுவது அழிக்கப்பட்டு , மழை அதிகம் பெய்ததால் விவசாயம் செழித்து பசி , பட்டினி என்கிற வார்த்தைகளே இல்லாமல் மகிச்சியாக இருக்கின்றனர்.!


*." அவன் கூப்ட்டாலும் இலவசம்தான்., ஆனா கூட மிஸ்டு விடுறான்.! " என்ற படியே போய்க்கொண்டிருதார் ஒரு இளைஞர்.!


*.வட கொரியா , தென் கொரியா எல்லைப்பிரச்சினைகள் தீர்ந்து இரு நாடுகளும் நட்பு நாடுகளாகின.!


*.இந்திய நதிகள் இணைக்கப்பட்டதால் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்ட கிராமங்கள் பயனடைந்தன. மேலும் அக்கிராமங்களில் விவசாயம் பெருமளவில் நடைபெறுகிறது.!


*.உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார வல்லரசாக மற்றம் கண்டிருந்தன.! 


*.தொலைக்காட்சிகள் முழுநேர பொழுதுபோக்கிற்கு மட்டுமே என்ற நிலை மாறி சில நல்ல நிகழ்சிகளும் வழங்கப்பட்டன. திரைப்படங்களில் வெட்டுவதும் குத்துவதும் அறவே இல்லாமல் நகைச்சுவைத் திரைப்படங்களும் குழந்தைகளுக்கான திரைப்படங்களும் பெருமளவில் தயாரிக்கபடுகின்றன.!


*.இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்ததும் வேலை தேடிச் செல்லாமல் விவசாயம் செய்வது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.!


*."நல்லபடியா போய் சேர்ந்துட்டியா.? " என்று ஒரு தாய் செவ்வாய்க்கு வேலைக்குச் சென்ற தனது மகனிடம் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தார்.!


*.உலக அளவில் புகழ்பெற்ற பிரபல ரேடியோ ஜாக்கி செல்வா தனது கோமாளி ப்ளாக்கிற்காக மொக்கையும் நானும் என்ற பதிவினை எழுதிவிட்டு உறங்கச்சென்றவர் படுக்கையிலேயே உயிரிழந்தார். இருந்த போதிலும் " உயிர் மீட்பு " என்கிற தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் உயிர்பெற்று எழுந்தார். உயிர்பெற்று எழுந்தவுடன் " இயற்கைக்கு எதிராக எதுவும் செய்திடவேண்டாம்.! " என்று கேட்டுக்கொண்டதால் அந்த தொழில்நுட்பம் திரும்பப்பெறப்பட்டு உயிரிழந்தார். அன்னாரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.!




இப்படி ஒரு சின்ன கற்பனை பண்ணி பாருங்களேன் . கற்பனைதான் காசா பணமா பண்ணி பாருங்க : 
பாலிதீன் குப்பைகள் இல்லாத , சுவர்களில் ஒட்டப்பட்டு பாதி கிழிந்த நிலையில் இருக்கும் சுவரொட்டிகள் இல்லாத , தெருவோரங்களில் சிறுநீர் , எச்சில் துப்பாத தூய்மையான ஒரு நகர்த்த கற்பனை பண்ணி பாருங்க. அதுல நீங்க காலைல எந்திரிச்சு பேப்பர் படிக்கும் போது ஈராக்கில் தற்கொலைப்படைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு , நைஜீரியாவில் பசிக்கொடுமையால் 8 பேர் உயிரிழப்பு , இந்தியா எல்லை ஓரங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் இது மாதிரியான செய்திகள் இல்லாம பேப்பர் படிக்கிறீங்க. அப்புறம் வேலைக்கு கிளம்புறீங்க. உங்க பக்கத்துல இந்தியப் பிரதமர் அதே பஸ்சுல வர்றார்.அவர பார்த்து கூட நீங்க எதுவுமே சொல்லல. அப்ப உங்க மனசுல ஒரு பழைய காட்சி வருது., அது என்னன்னா லோக்கல் MLA ஒருத்தர் ஒரு கார்ல போறாரு , அவருக்கு முன்னாடி 10 காரு , பின்னாடி 10 காரு." இந்த காட்சிக்கும் இப்ப நீங்க பாக்குறதுக்கும் இருக்குற வித்தியாசத்த நினைச்சு ரொம்ப சந்தோசப்படுறீங்க.! நீங்க போற வழில இருக்குற TASMAC கடைகள் மூடப்பட்டு இருக்கு., கடைகளில் சிகரட் மற்றும் இதர புகயிலைப்பொருட்கள் வாங்குவதற்கு ஆள் இல்லாம தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. டிராபிக் சிக்னல்ல போலீசோ இல்ல இதர ஆட்களோ இல்லாம இருந்தாலும் எல்லோரும் அமைதியா சிக்னல் பார்த்து வண்டி ஓட்டுறாங்க. அப்படியே வேலைக்குப் போறீங்க. வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது அப்படியே கோவில்பக்கம் போறீங்க , அங்க பிச்சைக்காரகள் இல்ல. நிம்மதியா சாமி கும்பிட்டுட்டு வரீங்க. வீட்டுக்கு வந்து டிவி போட்டதும் தொடர்கள் எதுவும் இல்லாம சில நல்ல நிகழ்சிகள் பாக்குறீங்க.. நிம்மதியா படுத்து தூங்குறீங்க.! எப்படி இருக்கு ..? சூப்பரா இருக்குள்ள ..?!

நீதி : நம்பிக்கையே வாழ்க்கை; நல்லதே நினைப்போம் , நல்லதே செய்வோம் , நல்லதே நடக்கும்.!௦


பின்குறிப்பு : இந்த மாற்றங்கள் எல்லாம் 2040 லயே வரணும்னு எழுதினேன். ஆனா கடைசி பத்தி எழுதிட்டு பார்த்தேன் 2040 ல எனக்கு 53 வயசு தான் ஆகிருந்தது. அதனால ஒரு 73 வரைக்குமாவது இருக்கணும்னு 2060 அப்படின்னு எழுத வேண்டியதா போச்சுங்க.! ஹி ஹி ஹி..



Tuesday, October 12, 2010

அப்பா.!

முன்குறிப்பு : காதல்ல மட்டும்தான் அன்பு பொங்கி வழியுமோ , மத்த உறவுகள்ள பாசம் வழியாதா..? இங்க ஒரு அப்பாவுக்கும் மகனுக்குமான பாசத்தைப் பாருங்க. இதப் படிச்சு முடிச்சதும் உங்க அப்பாவையோ மகனையோ நினைச்சீங்கன்னா அதுவே போதுமானது.!
இது சிறுகதை கிடையாதுங்க ., அதனால சிறுகதைல இருக்கிற தொடக்கம் ,முடிவு இதெல்லாம் இருக்காது.!

ஐப்பசி மாதம் அடைமழை பெய்யும் என்பதை நிரூபித்துகொண்டிருந்தது வானம் . இந்த அடைமழையிலும் துரு துருவென அங்கும் இங்கும் ஓடி ஆடி தனது குறும்புத்தனத்தைக்  காட்டிக்கொண்டிருந்தான் எழில். இரண்டு வயது சிறுவன்.! அவனைத் துரத்திக்கொண்டு

" டேய் , மழைக்குள்ள போகாதடா.! " என்று கத்தியவாறு பின்தொடர்ந்து கொண்டிருந்தான் அவனது தந்தை ரகு. மழையில் நனையத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகனை அலேக்காக தூக்கி முகத்தோடு ஒட்டி முத்தமிட்டவாறே " மழைக்குள்ள போனீனா ஊமாண்டி வந்திடும் .! அப்புறம் இந்த கையப் பிடிச்சு கடிச்சு வச்சிடும் " என்று அவனது பிஞ்சுக் கைகளை லேசாக வாய்க்குள் வைத்து கடிப்பது போல விளயாட்டுக்காட்டிக்கொண்டே வீட்டிற்குள் கொண்டு வந்து விட்டான்.

" இத்தன குறும்பு பண்ணுறான் ., இவன எப்படித்தான் வளர்க்கப்போரோமோ..? இவன எங்க அப்பா என்னை வளர்த்த மாதிரி வளர்க்கணும்.! "

" எப்பபார்த்தாலும் எங்கப்பா வளர்த்த மாதிரி எங்கப்பா வளர்த்த மாதிரி அப்படின்னு சொல்லுறீங்களே , அப்படி எப்படித்தான் வளர்த்தாரு..? " என்றாள் ரகுவின் மனைவி சாபியா.

" அத சொன்னா சொல்லிட்டே போகலாம்., அவரு என்னை எவ்ளோ லவ் பண்ணினாரு தெரியுமா ..? "

" எல்லா அப்பாக்களும்தான் தன்னோட புள்ளைங்களா லவ் பண்ணுறாங்க ., இதுல என்ன புதுசு..? "

" அவரு அடிக்கடி எங்கிட்ட ஒண்ணு சொல்லுவாரு .. எனக்கு அப்ப இரண்டு வயசு இருக்குமாம் ., ஒரு நாள் தொட்டில்ல தூங்கிட்டு இருந்தேனாம்., அப்ப அவரு வந்து என்ன தூக்குரக்காக குனியும்போது அவரோட முகத்துல நான் ஒண்ணுக்கு அடிச்சு விட்டுட்டேனாம் .! இதைய அடிக்கடி சொல்லி சிரிப்பார். அது மட்டும் இல்ல , பொதுவா நான் கேக்குறத எல்லாம் வாங்கித்தர மாட்டார். ஏன்னா கேக்குறத எல்லாம் வாங்கித்தந்தா எனக்கு ஏமாற்றம் அப்படினா என்ன அப்படிங்கிறதே தெரியாம போய்டும் அப்படிங்கறதுக்காக தேவையானத மட்டுமே வாங்கித்தருவார் .அப்பவெல்லாம் அவரு மேல எனக்கு கோவம் வரும். ஆனா அவர வெறுக்க முடியாது . எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருப்பாரு. கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பாரு. என்னைய அதிகமா அடிச்சது கூட கிடையாது ,, ஆனா அதுக்காக நான் எது செஞ்சாலும் எடுத்து கொஞ்ச மாட்டார். சில சமயங்கள்ல அடிச்சிருக்கார். ஆனா அவரு எத்தன தடவ அடிச்சார் அப்படிங்கறத விரல்விட்டு  எண்ணிறலாம் .. ஒருதடவ நான் பக்கத்து வீட்டுல இருந்து ஒரு பந்த திருடிட்டு வந்துட்டேன் அப்ப அடிச்சார் ., அப்புறமா நான் பள்ளிகூடத்துல பக்கத்துல இருந்த ஒருத்தன அடிச்சிட்டேன் .. அப்ப ஒரு தடவ அடிச்சார் .. அதுவும் கைதான் வேகமா வரும் .. ஆனா வலிக்காது .. வலிக்காட்டியும் கூட நான் அழுவேன். அப்புறம் என்ன எடுத்து கொஞ்சுவாரு , கடைக்கு கூட்டிட்டு போய் நான் கேட்டது எல்லாம் வாங்கித்தருவார்.
அதுவும் நான் 5 வது முடிக்க வரைக்கும் தான் என்னைய அடிச்சிருப்பார்.
அதுக்கு அப்புறமெல்லாம் கையை கூட ஓங்க மாட்டார்.! "

" இது எல்லா அப்பாவும் பண்ணுறது தானே ..? "

" உண்மைதான் ., ஆனா இதுக்கு அப்புறம் எங்க அப்பா வித்தியாசமானவர்..! "

" அப்படி என்ன வித்தியாசம்...? "

" நிறைய இருக்கு . நான் 10 வது படிச்சிட்டிருக்கும்போது எங்க கிளாஸ்ல ஒரு பொண்ணுக்கு லவ் லட்டர் எழுதிட்டு இருந்தேன்.அத எங்க அப்பா பார்த்துட்டார்.எனக்கு அவரப் பார்த்ததுமே ரொம்ப பயந்து போனேன் , கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. பயத்துல அழுகை வர ஆரம்பிச்சுடுச்சு. எனக்கு என்ன பேசுறதுனே தெரியாம என் தொண்டைல வார்த்தைகள் வந்து தேங்கி நின்னு அப் .. சா சா சாரி .. இனிமேல் ..,,,.. அவ்ளோ தான் அதுக்கு மேல என்னால பேச முடியல . தொண்டைல இருந்த அழுகை சத்தமாவே வந்துடுச்சு.. இப்ப மத்த அப்பாக்களா இருந்தா என்ன நடந்திருக்கும்னு நினைக்கிற.. ? "

" என்ன நடந்திருக்கும் , பெல்ட் கலட்டி செமையா வாங்கிருப்பீங்க..? "

" இங்கதான் எங்க அப்பா வித்யாசப்படுறார். நான் அழுதுட்டு பயந்து போய் நின்னுட்டிருந்தேன். என்னைய அப்படியே கட்டி பிடிச்சிட்டார் . எதுக்குடா சாரி , சொல்லுற..?  இந்த வயசுல லவ் வரும்டா , இதுக்கு போய் எதுக்கு அழுற ..? " அப்படின்னு என்னோட கண்ண துடைச்சு விட்டார். அப்புறம் கொஞ்ச நேரம் அதப் பத்தி பேசவே இல்ல.  வேற என்னமோ பேசி நக்கல் பண்ணிட்டு இருந்தார். நான் லவ் லட்டர் எழுதினது பத்தி பெரிசா எடுத்துக்கவே இல்ல. அதுக்கு அப்புறம் காதலுக்கும் , எதிர்பால் ஈர்ப்புக்கும் என்ன வித்தியாசம் அப்படின்னு சொல்லிகொடுத்தார். அப்புறம் எனக்கு அந்த பொண்ணு மேல இருந்த ஈர்ப்பு போய்டுச்சு. இந்த விசயத்துக்கு அப்புறம் நான் என்ன செஞ்சாலும் எங்க அப்பா கிட்ட கேட்டுத்தான் செய்வேன். என் ஸ்கூல்லயும் , காலேஜுலயும் எல்லாப்  பொண்ணுகளோடவும்  ரொம்ப ப்ரண்ட்லியா பழக ஆரம்பிச்சேன். எனக்கு இருக்குற இத்தன நண்பர்களுக்கு காரணமே எங்க அப்பாதான்.சத்தியமா அவர் மட்டும் என்னைய அந்த இடத்துல அடிசிருந்தார்னா என் வாழ்க்கை திசைமாறிப் போயிருக்கும்.

" ஜஸ்ட் மிஸ் , உங்க அப்பா மட்டும் அத படிக்காம இருந்திருந்தா நான் தப்பிச்சிருப்பேன்..!"

" என்ன கிண்டலா , ஆனா எங்க அப்பாவுக்கு உன்ன விட நக்கல் ஜாஸ்தி தெரியுமா.? அந்த லவ் லட்டர் எழுதினதுக்கு ஒரு வாரம் கழிச்சு எங்கிட்ட ஒண்ணு கேட்டா பாரு .. " ஏன்டா , உன் அழகில் மயங்கிப்போனேன் அப்படின்னு கவிதை மாதிரி எழுதிருந்தையே அந்த அளவுக்கு அது சூப்பர் பிகரா..? " . எனக்கு சிரிப்பு தாங்கல..

" உண்மைலேயே , மாமாவுக்கு நக்கல் ஜாஸ்திதான்."

" அது மட்டும் இல்ல , நான் முதல் நாள் காலேஜ் போகும் போது எங்க அம்மா எங்கிட்ட வந்து " டேய் படிச்சமா வந்தமா அப்படின்னு இருக்கணும் , எதாவது பொண்ண பாக்கறது இதெல்லாம் இருக்க கூடாது " அப்படின்னு சொன்னாங்க. அதுக்கு எங்க அப்பா " டேய் , அப்படியே பார்த்தாலும் நல்ல பொண்ணா பாருடா.." அப்படின்னார் . இத கேட்ட எங்க அம்மா " ஆமா , நல்லா சொல்லித்தரீங்க.." அப்படின்னு கோவமா சொன்னாங்க. அதுக்கு எங்க அப்பா " ஆமா , நீ சொன்னா அதைய அப்படியே பாலோ பண்ணிடுவானாக்கும்..? போடா போடா " அப்படின்னு சிரிசிட்டே போய்ட்டார் தெரியுமா.! அவர் என்னோட ஒவ்வொரு அசைவையும் ஆழமா தெரிஞ்சு வச்சிருக்கார்.

" என்னால நம்பவே முடியல .! "

 நான் வளர வளர அவர் என்னோட நெருங்கின நண்பர் மாதிரி ஆகிட்டார். நான் ஒரு தடவ எங்க பிரண்ட்ஸ் கூட நின்னு சிகரட் பிடிக்கரத பார்த்துட்டார். நான் வீட்டுக்கு வந்ததும் ஏதாவது கேப்பார்னு நினைச்சேன். ஆனா ஒண்ணுமே சொல்லல. அப்புறமா ஒரு வாரம் கழிச்சு என்ன தனியா கூப்பிட்டு " நான் சிகரட் குடிக்கறத நிறுத்திட்டேன் ., எனக்காக நீயும் நிறுத்திடுவியா .? " அப்படின்னார். எனக்கு என்ன பேசுறதுனே தெரியல. ஏன்னா எங்க அம்மா எத்தனையோ தடவ சொல்லி கேக்காதவர் நான் திருந்தனும் அப்படிங்கறதுக்காக ஒரே வாரத்துல சிகரட் குடிக்கறத நிறுத்தினார் தெரியுமா ..? அவர் என்ன பார்த்ததும் சொல்லிருக்கலாம். நானும் நிறுத்திருப்பேன். ஆனா அப்படி செய்யாம நான் நிறுத்திட்டேன் , நீயும் நிறுத்திடரியா ..? அப்படின்னு ஒரு வேண்டுகோள் மாதிரி கேட்டா எந்தப் பையன்தான் தப்பு பண்ணுவான். பையன் மேல அன்பு வைக்கிறதுங்கறது இதுதான். பையனுக்காக எதுவேணா செய்வேன் அப்படிங்கிற லவ் எத்தன அப்பாக்களுக்கு இருக்கு.? எங்க அப்பா அத விட மேல. அவரோட எண்ணங்களை என் மேல எப்பவுமே திணிக்க மாட்டார். நான் சின்ன வயசா இருக்கும் போது மட்டும் எது தப்பு எது சரி அப்படின்னு சொல்லிக்கொடுத்தார் .ஒரு 20 வயசுக்கு அப்புறமெல்லாம் " உனக்கு எது புடிக்குதோ அத செய் " அப்படிம்பார். ஏன்னு கேட்டா " சின்ன வயசுல இருந்து ஒரு குழந்தைய ஒரு 16 ,17 வயசு வரைக்கும் நல்லா வளர்த்திட்டா போதும். அதுக்கு அப்புறம் எந்தப் பிரச்சினையும் வராது .அதவிட எந்த ஒரு தனி மனிதனுக்கும் அவனோட உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கணும் , நான் அப்பாவா இருக்கறதால நான் சொல்லுறத மட்டுமே நீ கேக்கனும்னு அவசியம் கிடையாது " அப்படிம்பார். சத்தியமா அவரோட அளவுக்கு என்னால சிந்திக்கவே முடியாது. அவர் எனக்கு அப்பா மட்டும் கிடையாது .கடவுள் மாதிரி . என்னோட எல்லா உணர்வுகளுக்கும் மரியாதை கொடுப்பார். எனக்கு எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்தார். அவர் மட்டும் இல்லைனா நான் இப்ப இந்த அளவுக்கு உயர்ந்திருக்க முடியாது. இந்த மாதிரி ஒரு அப்பா கிடைச்சா பணம் எல்லாம் தேவையே இல்ல .கூட இருந்தாவே சந்தோசமா இருந்திடலாம்.

" சூப்பர் .."

என்னோட முகம் கொஞ்சம் வாட்டமா தெரிஞ்சாலும் கண்டுபிடிச்சிடுவார். அத விட நான் உன்ன லவ் பண்ணுறேன்னு சொல்லி நீ ஓகே சொன்னதுமே நான் முதல்ல எங்க அப்பா கிட்டதான் சொன்னேன் தெரியுமா ..? நாம ஒருத்தர லவ் பண்ணுறோம் அப்படின்னு நண்பர்கள் கிட்ட கூட சொல்லுறதுக்கு வெட்கப்படுவோம் . ஆனா எங்க அப்பா கிட்ட சொல்லுறதுக்கு நான் பயப்படவே இல்ல. உன்னப் பத்தி சொன்னதுமே " முஸ்லிம் பொண்ணா " அப்படின்னு கேப்பார்னு நினைச்சேன். ஆனா "  உன்ன கூட ஒருத்தி லவ் பன்னுறாளா , அவளுக்கு கண்ணு நல்லா தெரியுமான்னு கேட்டியா .? " அப்படின்னார். "நீங்க இன்னும் திருந்தவே இல்லையா..?" அப்படின்னு நான் கேட்டதுக்கு " சரி விடுடா , நான் வேணா இப்படி பேசுறேன் ., இந்த கல்யாணத்துக்கு நான் ஒத்துக்க மாட்டேன் . இது ஓகே வா ..? " அப்படின்னு கேட்டார் ." அப்பா, நக்கல் பண்ணாதீங்க.. அந்தப் பொண்ணு ஒரு முஸ்லிம் பொண்ணுங்கறதால பிரச்சினை வரும் போல இருக்கு., என்ன பண்ணுறது ..? "
" பார்த்துக்கலாம் விடு .." அப்படின்னு சொல்லிட்டு உங்க வீட்டுக்கு வந்தார் . நல்லவேளை உங்க அப்பா எங்க அப்பாவோட நண்பரா இருந்ததால் தப்பிச்சோம்.! அவர் என்ன லவ் பண்ணுன அளவுக்கு இந்த உலகத்துல யாரும் யாரையும் லவ் பண்ணிருக்க முடியாது.!

" சத்தியமா எனக்கும் பொறாமையா இருக்கு..! "

" ஒரு தடவ நான் வேலைக்காக வெளியூர் போக வேண்டி இருந்தது . எங்க அம்மா வாசல்ல வந்து நின்னு அழுதுட்டே வழியனுப்பி வச்சாங்க. ஆனா எங்க அப்பா " எதுக்கு அழுகுற , அவன் என்ன போருக்கா போறான்..? போயிட்டு வாடா.." அப்படின்னு அனுப்பி வச்சார் .ஆனா நான் போனதுக்கு அப்புறம் இரண்டுநாள் சாப்பிட கூட முடியாம என்னோட நியாபகத்துலையே இருந்தாராம் . இங்க நிறைய அப்பாக்கள் இப்படித்தான் .. நாம அழுதா எங்க நம்ம பையன் மனசு கலஞ்சிடுமோ அப்படின்னு மனசுக்குள்ள அழுதுட்டு வெளிய சிரிச்சிப்பாங்க. அவுங்க பாகுரக்கு முரட்டுத்தனமா இருந்தாலும் உள்ள அவுங்க மனசு பஞ்சு மாதிரி. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு நான் திரும்பி வரும்போது அவரோட கண்ணுல இருந்து மொழு மொழுன்னு தண்ணி கொட்டுச்சு தெரியுமா ..? அப்படியே என்ன வந்து கட்டிப் பிடிச்சிட்டார். இதுவும் கூட காதல் தான்.ஆண் பெண்ணுக்கு இடையிலான காதல்ல மட்டும் பாசம் பொங்குறது இல்லை ., இது மாதிரி குடும்ப உறவுகள்ள கூட பொங்கி வழியுது. நாம தான் அத கண்டுக்காம தொடச்சு எறிஞ்சிட்டு போயிடறோம்.!

" உண்மை தான்டா ., உனக்கு நம்ம பையன் மேல இருக்குற லவ் கூட அப்படித்தானடா..? நமக்கு கல்யாணம் ஆனதிலிருந்து நமக்கு பையன் பொறந்தா அவன அப்படி பார்த்துக்கணும் , பொண்ணு பொறந்தா இந்தப் பேரு வைக்கணும் அப்படின்னு சொல்லிக்கிட்டே இருப்பியே. காதல் கூட பார்த்து அழகா இருந்தாதான் வரும் . ஆனா இந்த பாசம்கறது பிறக்கரக்கு முன்னாடியே வந்திடும். நீ உன் பையன் மேல வச்சிருக்கற லவ் கூடத்தான் யாராலையும் வைக்க முடியாது. நாம லவ் பண்ணும் போது கூட இந்த அளவுக்கு உன்ன நான் பார்த்தது கிடையாது. எங்க போயிட்டு வந்தாலும் முதல்ல அவந்தான் தேடுற . சாப்பிடும்போதும் தூங்கும்போதும் மொத்தத்தில் உன்னோட நிழல் மாதிரி பைத்தியமா அலையுற. இத விட பாசத்துக்கு வேற எடுத்துக்காட்டு வேணுமா..? "

பின்குறிப்பு  : இந்த பதிவுல ரொம்ப கற்பனை அதிகமா இருக்கு , இப்படி எந்த அப்பாவும் இருக்க முடியாது அப்படின்னு நீங்க நினைச்சா முதல்ல சில காதல் கவிதைகள படிச்சிட்டு வாங்க . அவுங்க எழுதறது மட்டும் உண்மையா ..? " அன்பே நீ நிலவு போன்றவள் , உன் இதழ்கள் ரோஜா மொட்டு , நீ மணவறையில் நான்  நான் கல்லறையில் ( கவிதை என்ன கல்லறையில இருந்தா எழுதற )" அப்படின்னு அவுங்க மட்டும் எழுதலாம் . ங்கொய்யால... நாங்க எழுதக் கூடாதா..?

 நீதி : கோமாளிக்கு சென்டிமென்ட் எல்லாம் செட் ஆவாதுங்க.!

Wednesday, October 6, 2010

காட்சிப்பிழை (சவால் சிறுகதை )

முன்னுரை : இது நம்ம பரிசல்காரர் இந்தப் பதிவுல கேட்டிருந்த சவால் சிறுகதை போட்டிக்கான எனது சிறுகதை இது .! பாவம் இதைப் படிப்பவர்கள் ..


குளிரூட்டப்பட்ட அந்த அறையில் காவல்துறை உயர் அதிகாரியின் முன்னாள் காமினி , சமீர் , அருண் , சதீஷ் ஆகிய நால்வரும் எதற்கு தங்களை அழைத்திருக்கிறார் என்று புரியாமல் நின்றுகொண்டிருந்தனர். தொண்டையை சரிசெய்தவாரே பேச தொடங்கினார் காவல்துறை IG.

" நான் உங்க நாலு பேரையும் எதுக்கு வர சொன்னேன்னு தெரியுமா .. ? "

" தெரியாது சார். " என்றனர் நால்வரும் ஒரே குரலில்.

" ஓகே , நானே சொல்லுறேன். இப்ப கொஞ்ச நாளா வைரக்கடத்தல் அதிகமாயிட்டு வருது. இதனால நம்ம நாட்டோட அந்நியச் செலாவனில பாதிப்பு ஏற்படுது.So இந்த கடத்தல  தடுக்கறக்காக தனிப்படை அமைக்க முடிவு பண்ணித்தான் உங்களை வரச் சொன்னேன். நீங்க நாலு பேரும்தான் அந்த தனிப்படை. உங்கள்ள ஒருத்தர் கடத்தல்ல தொடர்புடயவங்களோட சேர்ந்து spy யா இருந்து மொத்த கேங்கையும் பிடிக்கணும். உங்க நாலு பேருல யாரு அவுங்களோட சேர்ந்து spy  யா இருக்க போறீங்க.? " என்று முடித்தார் I.G. பாபு.


" சார் , காமினிதான் சரியான தேர்வா இருப்பாங்கனு நினைக்கிறேன். ஏன்னா எங்க மூணு பேரையும் எல்லோருக்குமே தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு , ஆனா காமினி இப்பத்தானே join பண்ணினாங்க. அதனால மத்தவங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. " என்றான் சுரேஷ்.


" என்ன காமினி , ஓகே வா ..? " இது I.G. 


"கண்டிப்பா போறேன் சார் , ஆனா எப்படி அந்த கும்பல்ல சேர்றது .? "


" அதுக்கு சில ஐடியா இருக்கு , சொல்லுறேன் . இன்னிக்கு தேதி 12.08.2009. இன்னும் ஒரு வருசத்துக்குள்ள நாம இந்த கும்பல பிடிச்சே ஆகணும். இப்ப நீங்க கிளம்பலாம்." என்று புன்னகைத்தவாறே கூறினார் I.G. 


நால்வரும் ஒரு விரைப்பான சல்யூட்டிவிட்டு  அறையை விட்டு அகன்றனர்.


********************************************************************************************************


12.07.2010 காலை 9 மணி. கையில் வைரம் அடங்கிய பெட்டியுடன் காமினியும் சுந்தர், ரவி ஆகிய இருவரும் காமினிக்குப் பின்னாலும் வேக வேகமாக போய்க்கொண்டிருந்தனர். அப்பொழுது பின்னாலிருந்து வந்த தோட்டா ஒன்று காமினியின் இடது தோள்பட்டையில் பட்டதும் காமினி மயங்கி விழுந்தாள். இதனைப் பார்த்த ரவியும் , சுந்தரும் பின்னால் வந்து கொண்டிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து தெறித்து ஓடத்துவங்கினர். காமினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். பின்னர் அவளைப் பார்க்க வந்த சமீர் , 


" இவுங்களை ஏன்பா சுட்டீங்க ..? "


" சார் ,இவுங்க வைரம் கடத்துறது மாதிரி சந்தேகமா இருந்துச்சு சார் , நாங்க முடிஞ்ச அளவுக்கு சுடாம பிடிக்கணும்னு முயற்சி பண்ணினோம் .. ஆனா முடியல. நாங்க நினைச்சதும் சரியாப் போச்சு , அந்த பெட்டில பாருங்க " என்று காட்டினார் கான்ஸ்டபிள் ராமசாமி. 


" எல்லாம் சரிதான் , ஆனா இவுங்களும் போலீஸ் தான் ., " என்று காமினியைப் பற்றி விளக்கினார் சமீர்.


" சாரி சார் , எங்களுக்குத் தெரியாது .." என்று மன்னிப்பு கேட்டார் 


" சரி ,விடுங்க..ஆனா அவுங்க போலீஸ் அப்படிங்கிற விஷயம் மட்டும் வெளிய போகாம இருக்கணும் "  


" கண்டிப்பா சார் .. " என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே காமினிக்கு மயக்கம் தெளிந்திருந்தது.


" சமீர் , நீங்க எப்படி இங்க..? " என்றாள் காமினி.


" யாரோ , வைரக்கடத்தல் ஆசாமிய சுட்டுட்டாங்க அப்படின்னு சொன்னதால வந்தேன்.. பார்த்த உங்களை சுட்டுருக்காங்க.." 


" அத விடுங்க சமீர் , இன்னிக்கு நான் எப்படியாவது அங்க போயே ஆகணும் , ஏன்னா இன்னிக்கு அந்த கேங்கோட தலைவர பார்க்கப்போறேன். அவர பிடிசிட்டோம்னா நம்ம தனிப்படை அமைச்சதுல வெற்றி அடைஞ்சது மாதிரி ., ஆனா என்னால அங்க போக முடியுமா அப்படின்னு தெரியல. கை வலி அதிகமா இருக்கு .. " என்றாள் பரிதவித்தாள் காமினி.


" ஓ , ஒரே நிமிஷம் என்னோட பிரெண்ட் ஒருத்தர் இருக்கான் ., அவன் என்னமோ ஆராய்ச்சி பண்ணிட்டிருந்தான் . அவன கேட்டுப் பாக்குறேன்.. ! "


சமீர் அவரது நண்பர் சந்தோசிற்கு அழைத்தார். " சந்தோஷ் , எங்கடா இருக்க .? ஒரு ஹெல்ப் வேணும் "


" சொல்லுடா , என்ன ஹெல்ப் .? , திருடன எவனாவது பிடிச்சு தரணுமா ..? " 


" அதெல்லாம் வேண்டாம் , நீ என்னமோ ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தீல , அது என்ன ஆச்சு ..? "


" IAIT ஆராய்ச்சியா .? அது முடிஞ்சது மச்சி , சக்சஸ்..! " 


" அதுல தான் ஒரு உதவி வேணும் .." 


" பண்ணலாமே . சொல்லு ..! "


சமீர் நடந்தவற்றை விளக்கினான். " ஓகே , மச்சி நான் நேரா அந்த ஹாஸ்பிடலுக்கு வந்திடறேன் .. " என்று கட் செய்தான் சந்தோஷ்.


" ஓகே , காமினி  , சந்தோஷ் வந்திடுவான் , அவன் சொல்லுறத நல்லா கேட்டுக்கோங்க , அப்புறம் சதீசையும் வர சொல்லிடறேன்.! " 


" சரிங்க , இன்னிக்கு அவுங்கள பிடிச்சே ஆகணும்..அதுவும் இல்லாம என் கூட வந்த ரண்டுபேரும் கண்டிப்பா இங்க வருவாங்க ,அவுங்களையும் சமாளிச்சாகனும்.."


" பார்த்துக்கலாம் காமினி ., இதோ சந்தோஷ் வந்திட்டான்." 


" அவரு வந்திட்டாரா., " என்று உள்ளே வரும்போதே சதீசைப் பற்றி விசாரித்தான் சந்தோஷ்.


" வந்திட்டார் , உள்ள வெயிட் பண்ணுறார் , உன்னோட வேலைய ஆரம்பி போ ." என்றான் சமீர்.


அப்பொழுது சரியாக சுந்தரும் , ரவியும் வெளியே நின்றுகொண்டிருந்தனர். 


" டேய் எப்படியாவது காமினிய இங்க இருந்து கூட்டிட்டு போய்டணும் , போலீஸ் கைல மாட்டின அவ்ளோதான் .. " என்று அங்கலாய்த்தான் ரவி.


" டேய் டாக்டர் உள்ள போராருடா , அவரு வெளிய போனதுக்கு அப்புறம் ஏதாவது பிளான் பண்ணுவோம் , ஆனா போலீஸ்காரனுக நிக்குரானுகளே..? " இது சுந்தர். 


 " உள்ளே சென்ற டாக்டர் காமினியைப் பார்த்து விட்டு சமீரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் வெளியேறினர். இதைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர்.திடீரென சுந்தரின் முகம் மாறுவதைப் பார்த்த ரவியும் உள்ளே பார்க்க ஆரம்பித்தான் .  


டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.


" டேய் அங்க  பாருடா காமினி எந்திரிசுட்டாடா.," என்றான் சுந்தர்.


" ஆமாடா , சிவா சொன்னது மாதிரியே அங்க கூட்டிட்டுப் போய்டலாம். " இது ரவி.


வெளியே வந்த காமினி இவர்களைப் பார்த்ததும் எங்கே செல்வது என்பது போல கைகளில் சைகை செய்தாள். மூவரும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி வேனில் ஏறி சிவா கூறிய இடத்திற்கு விரைந்தார்கள். அந்த இடம் பெரிய அரங்கினைப் போல காட்சியளித்தது. சிவா இருக்கும் அறையை அடைந்தனர். இவர்களைப் பார்த்த சிவா , " வாங்க , இடைல ஒண்ணும் பிரச்சினை இல்லையே .? , அடி பலமா பட்டிருச்சா காமினி..? " 


" இல்ல, லேசான காயம்தான் ." 


"  சுந்தர், உன்னையும் ரவியையும் பரந்தாமன் வரச்சொன்னார்., எனக்கும் காமினிக்கும் ஒரு சின்ன வேலை இருக்கு .." என்றான் சிவா.


" ஓகே , சிவா நாங்க கிளம்பறோம் . " என்று விடைபெற்றனர் இருவரும்.


" தென் , காமினி அந்த வைரப் பெட்டிய எங்கிட்ட கொடுத்திடு..! " 


" என்ன சிவா சொல்லுற , இது நம்ம பாஸ் பரந்தாமன் சார் கிட்ட மட்டும் தான் கொடுப்பேன்.. " என்றாள் காமினி.


"எனக்குத் தெரியும் காமினி , நீ இப்படி பண்ணுவேன்னு , அதனாலதான் என்னோட துப்பாக்கியோட வயித்த நிரப்பி வச்சேன்.  “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.


துப்பாக்கியை வைத்ததும் அது வெறும் நிழலில் வைத்தது போன்று காமினியின் நெற்றிப் பகுதிக்குள் சென்றது. இதை பார்த்த சிவா பயத்தில் " பேய் பேய் "  என்றவாறே இரண்டடி தள்ளிப் போனான் ., 


" பேயெல்லாம் இல்ல சிவா , இது ஒரு டெக்னாலாஜி. இதோட பேரு IAIT (Invisible and Illusion Technology). 


" டெக்னாலஜியா ..? "


" ஆமா , நீ நினைக்கிற மாதிரி இங்க இருக்கறது காமினி கிடையாது ., அவுங்களோட நிழல்.! , அதே மாதிரி உன் கண்ணுக்கு தெரியாம நான் (சதீஸ்) இருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல எங்க ஆளுங்க வந்து உன்ன அரெஸ்ட் பண்ணிடுவாங்க. அதுக்கு முன்னாடி IAIT டெக்னாலஜிய பத்தி தெரிஞ்சிக்க.! " 


சிவா அதிர்ச்சியுடன் பார்த்துகொண்டிருந்தான். எங்கிருந்து குரல் வருது .? என்று பலவாறு குழம்பிப்போயிருந்தான். 


" எந்த ஒரு பொருளுமே நம்ம கண்ணுக்குத் தெரியணும்னா நம்ம கண்ணுல இருந்து போற ஒளி அந்தப் பொருள் மேல பட்டு எதிரொளிச்சாதான் நமக்குத் தெரியும். அதுக்கு பதிலா நம்ம கண்ணுல இருந்து போற ஒளிய அந்தப் பொருள் ஈர்துடுட்சுன்னா அந்தப் பொருள் நமக்குத் தெரியாது. அந்த மாதிரி ஒரு கெமிக்கல் கோட்டிங் தான் என் மேல பூசப்பட்டிருக்கு. அதே மாதிரி என்கைல இருக்குற லத்திளையும் பூசப்பட்டிருக்கு.! லத்தியோட தலைப்பகுதில ஒரு சிப் இருக்கு. அந்தச் சிப்போட வேலை என்னன்னா நாங்க கம்ப்யூட்டர்ல கொடுத்திருக்கிற உருவத்தோட  நிழல அடர்த்தியா அவுங்க அந்த இடத்துல இருக்குற மாதிரியான ஒரு கானல் உருவத்தைக் கொடுக்கும்.  அந்த உருவம் என்னோட உடல் அசைவுக்குத் தகுந்த மாதிரி இயங்குற மாதிரி பண்ணிருக்கோம். அந்த உருவம் தான் நீ பார்த்துட்டிருக்குற காமினியோட உருவம். காமினி ஹாஸ்பிட்டல்ல இருந்து இங்க என்ன நடக்குது அப்படிங்கிறத பார்த்துட்டு இருக்கா. அதோட நீ பேசுறதையும் கேட்டுக்கிட்டு இருக்குறா. நீ கேக்குற கேள்விக்கு அவ அங்கிருந்து பதில் சொல்லுவா . என்னோட உடம்புல ஒரு ஸ்பீக்கர் இருக்கு , அந்த ஸ்பீக்கர் வழியாதான் நீ காமினியோட குரலை கேட்ட. ! இதுக்குப் பேருதான் Illusion and Invisible Technology.! " என்று முடிப்பதற்கும் போலீஸ் வருவதற்கும் சரியாக இருந்தது. அவர்களிடம் சிவாவை ஒப்படைத்து விட்டு பரந்தாமனை சந்திக்க கிளம்பினார் காமினி (சதீஸ் ).!


**************************************************************************


காமினியைப் பார்த்ததும் பரந்தாமன் , " இப்பதான் எனக்கு உயிரே வந்துச்சு காமினி , உனக்கு ஒண்ணும் ஆகலையே ..? " என்றார்.


" இல்லை சார் , ஒண்ணும் பிரச்சினை இல்லை .. " 


" வைரம் என்ன ஆச்சு , போலீஸ் கைல சிக்கலையே.? "


" இதோ இருக்கு சார் ., " என்று தான் எடுத்து வந்திருந்த வைரப்பெட்டியை நீட்டினான்(ள்). அதைப் பார்த்ததும்   “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.


" தேங்க் யூ , சார்.. " 


" இன்னிக்கு நீ பண்ணிருக்கிற இந்த விசயத்தால நம்ம கேங் சார்பா இன்னிக்கு உனக்கு பெரிய ட்ரீட் காத்துட்டிருக்கு..! " என்றார் பரந்தாமன் மகிழ்ச்சியுடன்.


" மாமியார் வீட்டுல வச்சுக்கலாமா.. ? " என்ற ஆண் குரலைக் கேட்டதும் அதிர்ந்து போனார் பரந்தாமன். 


மறுநாள் காலையில் செய்தித்தாளில் பிரபல வைரக் கொள்ளைக் கூட்டம் பிடிபட்டது என்கிற செய்தியினைப்  படித்தவாறே பெட்டில் இருந்து எழுந்திருக்க முயன்று கொண்டிருந்தாள் காமினி.
                                                                                                                                                           - முற்றும். 


பின்குறிப்பு : போட்டிக்கான கதை முற்றும் என்பதுடன் முடிந்தது. கதை கலக்கல் , அருமை அப்படின்னு கமெண்ட் போடனும்கறது இல்லை சும்மா கும்மி அடிச்சிட்டு போங்க ..!!